கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் குண்டுபாய்ந்து மரணமாகியுள்ளார். இது கொலையா, தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் நடை பெற்று வருகின்றன என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவைச் சேர்ந்த குமார (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத் தின் 66 ஆவது டிவிசன் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.