தந்தையை யுத்தத்தால் இழந்து ,தாயாரை வறுமை காரணமாக பிரிந்து அம்மம்மா மற்றும் சிறியதாயாருடன் கிளிநொச்சியில் வசிக்கின்ற இந்த தமிழினி , தங்கை தமிழ் நிலா ( இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ) அவர்களை லண்டனில் வசிக்கும் ஒரு கருணை உள்ளம் கொண்ட தொழில் அதிபர் சமூக சேவை ஆவலர் ஒருவர் பொறுப்பு எடுத்துள்ளார்.
(வலம் கொடுப்பதை இடம் அறியக்கூடாது என்பது போல அவர் தனது பெயரை கூறி விளம்பரப்படுத்த விருப்பமில்லை) இவர் இந்த குடும்பத்திற்கான முழு பொறுப்பையும் எடுத்து தானாக மனமுவந்து உதவிகளை தொடங்கி விட்டார்.
இந்த தொடர்பினை கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்[KILIPEOPLE.ORG-UK] ( கிளிநொச்சியில் உள்ள தொண்டர்கள் IBC நேரலை ஊடாக நேரடியாக ஒழுங்கமைத்து கொடுத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
ஆதலால் இந்த தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பிடம் தினமும் இப்படியான உதவி கோரல்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன நாமும் எம்மாலான வற்றை முன்னுரிமை அடிப்படையில் செய்து வருகின்றோம். கருணை உள்ளம் கொண்டவர்கள் எம்மிடம் அணுகினால் இந்த தமிழினி குடும்பத்தை போல நிறைய குடும்பங்களை உங்களுடன் நேரடியாக தொடர்பு படுத்திவிடுவோம்.
இப்படியான உதவிகள் தேவைபடுபவர்கள் மனம் திறந்து உரிமையுடன் எம்மிடம் அணுகுங்கள் .
கேளுங்கள் தரப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் ,தேடுங்கள் கிடைக்கும் என்கிறார்கள் இந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர்(KILIPEOPLE.ORG- UK)
மேலதிக தொடர்புகளுக்கு: kilipeople2011@gmail.com / /07979767485/07536436916/ 07957122472.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.