பக்கங்கள்

25 அக்டோபர் 2012

கிளிநொச்சியில் மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் படைகள்!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 21 காணித்துண்டுகளை இராணுவத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரப்பட்டு கரைச்சிப் பிரதேச செலயகத்துக்கு இராணுவத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு, கணேசபுரம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள், மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கு சொந்தமான சுமார் பதினேழு காணித்துண்டுகள் தற்போது இராணுவத்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அவற்றை தமக்கு வழங்குமாறும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு மேலதிகமாக 4 காணித் துண்டுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் விண்ணப்பிக்கப்பட்ட காணித்துண்டுகளை வழங்குவதற்கு சில அரச அதிகாரிகள் விருப்பம் தெரிவிப்பது மட்டுல்லாமல், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.