12இலங்கையர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுக்காக நிதி திரட்டியவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர்.
உலகத் தமிழர் அமைப்பில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர்.
கனேடிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு திணைக்களத்துடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் குறித்த இலங்கையர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரிட்ஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, கியூபிக் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரச்சாரம் செய்தமை மற்றும் நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு;ள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடும் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.