மெனிக்பாமிற்கு மூடுவிழா நடத்தி சர்வதேசத்தை திருப்பதிபடுத்தும் நோக்கில் அங்கிருந்து கொண்டுபோய் அடிப்படை வசதிகளற்ற நிலையில் சூரிபுரத்தில் கைவிடப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு உதவுவதற்காக வவுனியாவில் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஆரம்பித்துள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், சிவிசக்தி ஆனந்தன் உட்பட வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் வவுனியா நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் ஓரிரு நாட்களில் சூரிபுரத்தல் உள்ள கேப்பாபுலவு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.