பக்கங்கள்

25 அக்டோபர் 2012

தமிழருடன் பேச சிங்கள எம்பிக்கள் ஐரோப்பா விஜயமாம்!

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனராம். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரே  ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளவர்களாம்.புலம் பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக் கொள்வதற்கும், முரண்பாடுகளை களைவதற்கும் இந்த விஜயம் வழிகோலும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.இந்த விஜயத்தின் இறுதியில் பரிந்துரை அறிக்கையொன்று அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை உலகத்தமிழர் பேரவை சிறீலங்கா அரசுடன் எவ்வித பேச்சுக்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.