பக்கங்கள்

31 அக்டோபர் 2012

வீட்டிற்குள் சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுப்பு!

ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் மழை நீர் உட்புகுந்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் கொட்டிலின் கரையில் மண்ணை அணைத்து நீர் உட்புக முடியாமல் தடுக்க முயற்சித்த போது, மண்வெட்டியில் சிக்கிய ஒரு பொருளைக் கவனமாக எடுத்துப் பார்த்துள்ளார். அது ஏதோ ஒரு வகை வெடி பொருளைப் போன்று காணப்பட்டதனால் அதைக் கவனமாக வைத்து விட்டு உடனடியாக இராணுவத்தினருக்கும் எவ். எஸ். டி. என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த எவ். எஸ். டி. நிறுவனத்தினர் அந்தக் குண்டைக் கவனமாக வீட்டில் அருகில் இருந்து தூரத்தில் வைத்து வெடிக்க வைத்தனர். அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தொலைவில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்பே மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது அது மிகவும் பெரிய சத்தத்துடன் வெடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.