பக்கங்கள்

30 அக்டோபர் 2012

மின்சார கம்பி அறுந்து வீழ்ந்ததால் பருத்தித்துறையில் மாணவன் பலி!

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் (29-10-2012) நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்தப்பா தயாபரன் என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார். தம்பசிட்டி முருகன் கோவில் ஒழுங்கையில் தயாபரன் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி மின் ஏந்திச் சென்ற கம்பி அறுந்து அவர் மீது வீழ்ந்ததினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரதேச பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.