பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் ஒன்பதாயிரம் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.