பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்தனர். தமிழர்கள் சிங்களவர்கள் உட்பட சுமார் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இறுதி நேரத்தில் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ததாக பிரித்தானியாவின் முன்னணி ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.