இயக்கச்சிக்கும் ஆனையிறவிற்கும் இடையில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கிளி. கோணாவில் காந்தி கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இ.லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே டிப்பரினால் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.