நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 அக்டோபர் 2012
இளையாராஜா இசை நிகழ்ச்சி ரத்து?
வீட்டிற்குள் சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுப்பு!
ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் மழை நீர் உட்புகுந்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் கொட்டிலின் கரையில் மண்ணை அணைத்து நீர் உட்புக முடியாமல் தடுக்க முயற்சித்த போது, மண்வெட்டியில் சிக்கிய ஒரு பொருளைக் கவனமாக எடுத்துப் பார்த்துள்ளார். அது ஏதோ ஒரு வகை வெடி பொருளைப் போன்று காணப்பட்டதனால் அதைக் கவனமாக வைத்து விட்டு உடனடியாக இராணுவத்தினருக்கும் எவ். எஸ். டி. என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து வந்த எவ். எஸ். டி. நிறுவனத்தினர் அந்தக் குண்டைக் கவனமாக வீட்டில் அருகில் இருந்து தூரத்தில் வைத்து வெடிக்க வைத்தனர். அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தொலைவில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்பே மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது அது மிகவும் பெரிய சத்தத்துடன் வெடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
30 அக்டோபர் 2012
"நீங்கள் இங்க இருங்களன்; நானும் வாறன் கெதியா" 6 பிள்ளைகளின் தாயாரின் கண்ணீர் கதை!
இருப்பதற்கு ஓர் இடம் இல்லாமலும் பராமரிப்பதற்குப் பெற்ற பிள்ளைகள் முன்வராமையாலும் தனது நோய்வாய்ப்பட்ட கணவனை கைதடி வயோதிபர் இல்லத்தில் இணைத்தார் வயோதிப மனைவி. இப்படி ஒரு பரிதாபச் சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கணவரான ஜோண் திரவியத்துக்கு வயது 83. மனைவி திரவியம் இராசாத்தியம்மாவுக்கு வயது 75 இவர்களுக்கு 6 பிள்ளைகள் தம்மைப் பராமரிப்பதற்குத் தமது பிள்ளைகள் முன்வராமையால் வயது முதிர்ந்த நேரத்தில் தமது வாழ்க்கையை நடத்திச்செல்வதில் பெரும் சிரமப்பட்டனர்.
இவர்களுக்குத் தங்கியிருப்பதற்கு இருப்பிடமும் இருக்கவில்லை. இதனால் பெரிதும் அந்தரித்த நிலையில் இருந்து வந்தனர். சுகயீனமடைந்துள்ள தனது கணவரைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு முடியாமல் போனமையால் அவர் தனது கணவரையும் அழைத்துக் கொண்டு நேராகக் கைதடி அரச முதியோர் இல்லத்துக்குச் சென்றார்.
தானும் நோய்வாய்ப் பட்டுள்ள நிலையில் தனது கணவரைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளதாகவும், பிள்ளைகளும் தம்மைப் பராமரிக்க முன் வராமை காரணமாகத் தாங்கள் பெரிதும் துன்பப்படுவதாகவும் தெரிவித்த அந்த வயோதிபப்பெண் இல்ல அத்தியட்சகர் முன்பாக விம்மி விம்மி அழத்தொடங்கினார்.
அவர்களின் நிலையைக் கண்டு கொண்ட இல்லத்தின் அத்தியட்சகர் என்.கிருபாகரன் அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வயது முதிர்ந்த கணவனான திரவியத்தை முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொண்டார்.
தனது கணவனை ஒரு இடத்தில் ஒப்படைத்து விட்ட மனத்திருப்தியுடன் முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது, எனது கணவரை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். நான் எங்கேயாவது இருந்து வாழ்கிறேன்.
அடிக்கடி அவரை வந்து பார்த்துச் செல்வேன் யாரும் இல்லாவிட்டால் நானும் இங்கு வருகிறேன். என அழுதழுது கூறி விட்டுச் சென்றதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த மாத முற்பகுதியில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகளின் போது பெற்றோரைப் பிள்ளைகள் அன்பு, ஆதரவுடன் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றமை மனவேதனை அளிப்பதாக இல்ல அத்தியட்சகர் மேலும் கூறினார்.
பிள்ளைகள் தமது பெற்றோரை இப்படி அநாதரவாக விட்டுச் செல்லும் நிலை எமது சமூகத்தில் அதிகரித்து வருவதாகவும் இந்த நிலையை மாற்றுவதற்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தப் பெற்றோரைக் கைவிட்டுள்ள 6 பிள்ளைகளும் வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசிப்பதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
பாருங்கள் இந்தப் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமையை.
மின்சார கம்பி அறுந்து வீழ்ந்ததால் பருத்தித்துறையில் மாணவன் பலி!
யாழ். பருத்தித்துறைப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் (29-10-2012) நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்தப்பா தயாபரன் என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.
தம்பசிட்டி முருகன் கோவில் ஒழுங்கையில் தயாபரன் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி மின் ஏந்திச் சென்ற கம்பி அறுந்து அவர் மீது வீழ்ந்ததினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரதேச பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
29 அக்டோபர் 2012
இசைஞானி இளையராஜா நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டால் மகிழ்வோம்– செந்தமிழன் சீமான்
தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.
அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.
இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
புலிகளை அழிக்க வஞ்சகம் செய்தவரே சொல்ஹய்ம்; விடுதலைப் புலிகள் அறிக்கை
மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை என்கிறார் கோத்தபாய!
28 அக்டோபர் 2012
கனடாவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது!
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுவித்திருக்கிறது.
இதுவரை சேத விவரம் எதுவும் தெரியவில்லை.
ஆனந்தபுரத்தில் குண்டு வெடித்து சிறுமி பலி!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம் என்னுமிடத்தில் குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
இந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த 28 வயதான அவரது மற்றுமொரு சகோதரி, சிதறிச் சென்ற குண்டின் பாகம் ஒன்று தாக்கியதில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அயலவரான பெண் ஒருவர் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று ஊகம் தெரிவித்திருப்பதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல கிராமங்களில் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்யும்போது பொது மக்களால் கண்டெடுக்கப்படுகின்ற பல வகையான வெடிப்பொருட்களை இராணுவத்தினர் அகற்றிச் செல்வதாகவும், இதனால் தமது வாழ்க்கை ஆபத்து மிக்கதாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிறுமியை பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம் வெடிப்பொருட்கள் தொடர்பான மக்களின் அச்ச உணர்வை மேலும் அதிகரித்திருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் கூறினர்.
இலங்கை கப்பல்களை தடுத்து நிறுத்தியது அமெரிக்கா!
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.
எனினும் அமெரிக்க தடை காரணமாக, இலங்கையை சிறிய கப்பல்களை அனுப்புமாறு ஈரான் கோரியது. அதற்கமைய கப்பல்களும் அனுப்பப்பட்டன. எனினும் ஈரான் செல்லும் கப்பல்களுக்கு காப்புறுதியை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் முன்வர மறுக்கின்றன.
இதன் காரணமாக ஈரானுடன் வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
27 அக்டோபர் 2012
புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்!
புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேரை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியுள்ளது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்திய நபர்களுக்கே புகலிடம் மறுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த 14 பேரும் மீனவர்கள் சிலரை நடுகடலில் வைத்து கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்தி; சென்றதாகக் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
படகு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிற்கு அறிவித்திருந்தது. இதன்பிரகாரமே படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களை அந்நாட்டு குடிவரவு குடியழகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகை கடத்திய குறித்த 14 புகலிடக் கோரிக்கையாளர்களும் கொகோஸ் தீவுகளிலிருந்து விசேட விமானம் மூலம்; நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த படகு கடந்த 13ம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசுதான் இழுத்தடிக்கின்றது.
13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்குமாறு கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நியாயமான தீர்வு கிடைப்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தாத நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவுக்குழுவில் இணையமுடியும் எனவும் தீர்வை இழுத்தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காமல் காலம் கடத்தும் செயற்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொறுப்பு என அரச தரப்பு தெரிவித்து வரும் கருத்து தொடர்பாகவே புளொட் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று அரசில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்தக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நிலையில் நியாயமான தீர்வு எவ்வாறு கிடைக்கும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வு திட்டம் எதையும் இதுவரையில் முன்வைக்கவில்லை.இவ்வாறானதொரு நிலைமையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு இணையமுடியும்.
வெளிச்சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, எவ்வாறு தான் முன்வைக்கும் தீர்வில் தமிழர் நலன்சார் விடயங்களை முன்வைக்கும் எனவும் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம்களின் மத்ரஸா அநுராதபுரத்தில் தீக்கிரை!
அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மத்ரஸா ஒன்று இன்று அதிகாலை எரிச்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்றே இதனைச் செய்ததாகத் தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த மதரசா எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது.
இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையில் இயங்கி வந்த மேற்படி கற்கை நிலையம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
26 அக்டோபர் 2012
பாம்புகளுடனும் கண்ணிவெடிகளுக்கிடையிலும் வாழும் மீள் குடியேற்றப்பட்ட மக்கள்!
(செய்தி ஆதாரம் பி.பி.சி)
25 அக்டோபர் 2012
கிளிநொச்சியில் மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் படைகள்!
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 21 காணித்துண்டுகளை இராணுவத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரப்பட்டு கரைச்சிப் பிரதேச செலயகத்துக்கு இராணுவத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு, கணேசபுரம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள், மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கு சொந்தமான சுமார் பதினேழு காணித்துண்டுகள் தற்போது இராணுவத்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அவற்றை தமக்கு வழங்குமாறும் விண்ணப்பித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக 4 காணித் துண்டுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இராணுவத்தினரால் விண்ணப்பிக்கப்பட்ட காணித்துண்டுகளை வழங்குவதற்கு சில அரச அதிகாரிகள் விருப்பம் தெரிவிப்பது மட்டுல்லாமல், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா.சட்டங்களுக்கு முரணான மீள்குடியேற்றம்!
ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு முரணாக இலங்கையில் தமிழ் மக்கள் வற்புறுத்தப்பட்டு மீழ் குடியேறம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம்பெயர்ந்தோர்க்கான இயக்குனர் கூறியுள்ளார். அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள அவர், இலங்கையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த இடங்களில் அல்லாது பிற இடங்களில் மீழ் குடியேற்ற செய்யப்பட்ட மக்களையும் பார்வையிடுவார் என அறிய முடிகின்றது.
தமிழருடன் பேச சிங்கள எம்பிக்கள் ஐரோப்பா விஜயமாம்!
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனராம்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரே ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளவர்களாம்.புலம் பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக் கொள்வதற்கும், முரண்பாடுகளை களைவதற்கும் இந்த விஜயம் வழிகோலும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.இந்த விஜயத்தின் இறுதியில் பரிந்துரை அறிக்கையொன்று அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை உலகத்தமிழர் பேரவை சிறீலங்கா அரசுடன் எவ்வித பேச்சுக்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
24 அக்டோபர் 2012
முதலமைச்சர் வேட்பாளர் டக்ளஸா கேப்பியா?அரசுக்குள் முரண்பாடு!

பிரித்தானியாவிலிருந்து 48இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்!
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்தனர். தமிழர்கள் சிங்களவர்கள் உட்பட சுமார் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இறுதி நேரத்தில் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ததாக பிரித்தானியாவின் முன்னணி ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
23 அக்டோபர் 2012
இளையராஜாவின் இசை நிகழ்வை புறக்கணிக்குமாறு கனடா தமிழர்கள் வேண்டுகோள்!
கனடாவில் இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா தமிழர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!
தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.
எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்று வதற்காக எங்களின் தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம்.
இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை. ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான்.
ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான். இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.
எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள்.
கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது.
எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழினியின் துயரம் நீங்கிவிட்டது - ஆயினும் இன்னமும் எத்தனை எத்தனை தமிழ் உறவுகள் இப்படி இருக்கிறார்களோ!
வன்னியில் ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா?
சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.
எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டார். அவரும், குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து, 9 மாதங்களாகியும் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாதுள்ளது.
"இலங்கை இறுதிப் போரின்போது, ஐ.நா மேற்கொண்ட பணிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சார்ள்ஸ் பெற்றி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா? எனவும் அது கேள்வியெழுப்பியுள்ளது.
இதனிடையே, இந்த அறிக்கையைத் தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
22 அக்டோபர் 2012
டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார்.
புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமளித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுவதாகத் தெரிகிறது.
13ஆவது திருத்தத்தினை ரத்துச் செய்வது தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தான இந்திய மத்திய அரசின் கோரிக்கை, வடபகுதியில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பது போன்ற விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்புச் செயலாளருடன் ஆராய்வார் என்று உயர்மட்ட இந்திய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.எதிர்வரும் புதன்கிழமையளவில் கோத்தபாய இந்தியா செல்வாரென தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது.
21 அக்டோபர் 2012
ஜனநாயக மக்கள் முன்னணியின் பதவி நிலைகள் மற்றும் புதிய நிர்வாகிகள்.
கடந்த வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் புதிய பதவிகளுக்கான தெரிவுகளும், நடப்பு பதவி நிலைகளும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன. அதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய மட்ட நிர்வாகிகளாக பின்வருவோர் கடமையாற்றுவார்கள்.
தலைவர் மற்றும் பொதுசெயலாளர் மனோ கணேசன், பிரதி தலைவர் நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன், தவிசாளர் பி. ஜெயபாலன், உப தலைவர் முரளி ரகுநாதன், உப தவிசாளர் முரளி வேலாயுதன், நிதி செயலாளர் கே. கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, உதவி பொது செயலாளர் எஸ். குகவரதன், ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா, பிரச்சார செயலாளர் கே.டி. குருசாமி, தலைமையக செயலாளர் லோரன்ஸ் பெர்னாண்டோ, உதவி நிர்வாக செயலாளர் வேலு குமார், உதவி பிரச்சார செயலாளர் ஏ. கே. ராஜ்குமார், உதவி தலைமையக செயலாளர் எம். நாகலிங்கம் ராஜா, சமூக நலவுரிமை விவகார குழு தலைவர் ஜெரோம் விக்னேஸ்வரன்-உப தலைவர் பிரதீப் ராஜகுமாரன், வாக்குரிமை விவகார குழு தலைவர் த. மனோகரன், கல்வி விவகார குழு தலைவர் லயன் எஸ்.மனோகரன்-உப தலைவி எஸ். மஞ்சுளா, மகளிர் விவகார குழு தலைவி நந்தினி விஜயரத்தினம், இளைஞர் விவகார குழு தலைவர் எம். நவாஸ், கலாச்சார விவகார குழு தலைவர் கே. செந்தில்குமார், இடர் நிவாரண குழு தலைவர் வேலணை வேணியன்-உப தலைவர் எஸ். பாஸ்கரா.
-ஜனநாயக மக்கள் முன்னணி-
-ஜனநாயக மக்கள் முன்னணி-
அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினராம்!
அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் கடற் கொள்ளையர்களாக மாறினர் , என அவுஸ்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி.
வடமாகாணசபையின் அரச முதலமைச்சர் வேட்பாளர் கே.பியாம்?
அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனை ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக தற்போதிருந்தே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு கே.பிக்கு கிளிநொச்சியிலுள்ள தமிழ்ச்செல்வனின் வீட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
தமிழ்ச் செல்வனின் இந்த வீட்டிலிருந்தே கே.பி தனது வடமாகாண அரசியல் மற்றும் வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முனெடுக்கவுள்ளார் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
20 அக்டோபர் 2012
கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள்!
![]() |
புலம்பெயர் தமிழருடன் பேசப்போகிறதாம் சிறீலங்கா!
புலம்பெயர் தமிழ் மக்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 அக்டோபர் 2012
டக்ளஸ் ஆஜராகித்தான் ஆக வேண்டும்!
சென்னை இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
வழக்கு என்ன?
தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர். பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மீண்டும் சூடுபிடித்த வழக்கு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.
வழக்கு என்ன?
தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர். பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மீண்டும் சூடுபிடித்த வழக்கு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.
படையினரை கொன்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல்!
வில்பத்து வனத்தின் கொட்டகச்சி என்ற பிரதேசத்தில் சாலியபுர இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரை கைக்குண்டு வீசி தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த இரண்டு விடுதலைப்புலிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில், புலிகளின் முக்கிய உறுப்பினர்களான எஸ்.ஜே. என்ற உதயன், ஐயன் அல்லது சிவலிங்கம் என அழைக்கப்படும் சிவபிரகாஷ் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், தாம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாளிகள் அல்ல என சந்தேக நபர்கள் தெரிவித்தனர்.
2007 மார்ச் 09 திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், வில்பத்து தேசிய வன பகுதியில் கடமையின் நிமித்தம் ஜீப் வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த லெப்டினட் கேர்ணல் ஜயந்த சுரவீர, மேஜர் விஜேரத்ன, இராணுவப் சிப்பாய்களான கபில குமார, சுரங்க ஆகியோர் கொட்டக்கச்சி பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி கசுன் பொன்னப்பெரு ஆஜராகியிருந்தார். மேற்படி சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
18 அக்டோபர் 2012
கடற்படையினர் மாதகலிலிருந்து 20ஆம் திகதி வெளியேறுவர்: மு.சந்திரகுமார்
கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை.
தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது.
தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன.
அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது.
உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தினர் கையெழுத்து, உங்கள் உறவினர் - அயலவர் - நண்பர்களின் கையெழுத்துகள் மட்டுமன்றி, இன மதங்களுக்கு அப்பாற்பட்டதாக உங்களுக்கு அறிமுகமான, உங்களுடன் பணிபுரிகின்ற ஒவ்வொருவரின் கையெழுத்தையும் இதற்காகப் பெறுங்கள் என்று உங்களை உரிமையுடன் கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகின்றது.
ஒன்று பத்தாகி; பத்துகள் நூறாகி; நூறுகள் ஆயிரமாகி ஆயிரங்கள் லட்சங்களாகி ஒரு கோடியாக எட்டட்டும்! !
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 416-830-7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca
ஒன்று பத்தாகி; பத்துகள் நூறாகி; நூறுகள் ஆயிரமாகி ஆயிரங்கள் லட்சங்களாகி ஒரு கோடியாக எட்டட்டும்! !
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை தொலைபேசி: 416-830-7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca
17 அக்டோபர் 2012
பல்கலைக்கழக மாணவர்ளுக்கு மீண்டும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி?
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும் சர்ச்சைக்குரிய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் ஒன்பதாயிரம் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சவுதியில் எஜமானை கொன்ற இலங்கையர்!
சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது தொழில் தருணரை கொலை செய்துவிட்டு, தொழில் தருணரின் மனைவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில் தருணரையும், அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து தொழில் தருணரை கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அவரது மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது காவற்துறையினர் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெரிவுக்குழு பொய்யானது; நிரூபித்தது கோத்தா கூற்று –ஐ.தே.க
16 அக்டோபர் 2012
அடிதடியில் இறங்கினார் விஜயகலா மகேஸ்வரன்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் வர்த்தக நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டை சதாம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள விமானசேவை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து அதன் உரிமையாளரை இந்த குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் வர்த்தக நிலையத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12.00 கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உரிமையாளரான இ.சுரேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வானில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா தலைமையில் சிவில் உடையில் வந்தவர்களே நிறுவன உரிமையாளரை கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும் வடமாகாண ஆளுளர் சந்திரசிறியின் செயலாளரான மேஜர் சுனில் ஜயக்கொடி தலைமையிலான பத்து பேர் கொண்ட இரர்ணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்து நிறுவனத்தினை சேதப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது வர்த்தக நிலையமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோதும் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தாம் அந்த கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவரும் போது அதனை அச்சுறுத்தி அபகரிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா முயல்வதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டிய ஒருவர் இவ்வாறு இராணுவத்தினருடன் இணைந்து மாபியா கும்பல்போல் செயற்பட்டு வருவது தொடர்பில் தரப்பினர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இல்லாது போனால் மனித உரிமை ஆணைக்குழுவை நாடப்போவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
கோத்தபாயவுக்கு எதிராக, மாதகல் மக்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2009ஆம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும் தாங்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லவோ சொந்தக் காணிகளில் குடியிருக்கவோ அனுமதிக்கப் படவில்லை. மாறாக வலிகாமம் பலாலி படைத்தளத்துக்கு வெளியேயுள்ள மக்களது நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி சுற்றிவேலி அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதிக்குள் எவரும் உட்பிரவேசிக்கலாகாது என்ற அறிவித்தலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாதகல் மேற்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள், நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மோகான் பாலேந்திரா ஊடாக தங்கள் சார்பிலும் அந்தப் பகுதிப் பொது மக்களின் நலன் சார்பிலும் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெட்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியவர்களை அவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வடபகுதியில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 1992ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வடக்கில் 2009ஆம் ஆண்டு மோதல்கள் முடிவுக்கு வந்தபோதிலும் தமது சொந்தக் காணிகளுக்கு குடும்பங்களுடன் தங்களால் திரும்பமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பி அங்கு வசிப்பது நல்லிணக்கப்பாட்டுக்கான ஒரு முக்கிய அம்சமாகும். எனவே போர் 2009ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டதால் இது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் பகுதியில் அந்தப் பகுதி மக்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று அந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் ஏற்கனவே கட்டளையொன்றை பிறப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்குத் திரும்பவோ தமது காணிகளில் குடியேறவோ அனுமதிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு அவர்கள் கொண்டுவந்துள்ளனர்.
அவர்கள் மேற்கொண்டும் தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தமது காணிகள் இருக்கும் பகுதியானது உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறும் சட்டமோ ஒழுங்கு விதிகளோ ஒருபோதும் இருந்ததில்லை. மற்றும் 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவசரகால நிலைமை நீக்கப்பட்டதை அடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என்று இலங்கையில் எந்தப் பகுதியும் பிரகடனப்படுத்தப்படுவதற்குச் சட்ட அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன் தங்களையோ வேறு அப்பகுதி மக்களையோ மீளக் குடியமர்வதிலிருந்து தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் செல்லுபடியாகும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசமைப்பின் கீழ் தங்களுக்குள்ள உரிமையின்படி மீளவும் தங்கள் காணிகளில் சென்று குடியமர்வதற்கேற்ற தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டித் தீர்ப்பொன்றை வழங்கும்படி மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.
15 அக்டோபர் 2012
20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன்!
மட்டக்களப்பில் தமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம்!
மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கல்முனையில் ஆடைவிற்பனை நிலையம் ஒன்றில் வேலைசெய்யும் தமிழ் இளம் பெண் ஒருவரை அக்கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள போதிலும் காவல்துறையினர் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தமிழ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்களின் வறுமை காரணமாக இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்!
திவிநேகும சட்டத்திற்கு எதிராக மூன்று வெவ்வேறு வழக்குகள்!
14 அக்டோபர் 2012
மஞ்சுள திலகரட்ன தாக்குதலின் பின்னணியில் புலிகள் என்கிறார் விமல்!
நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி, மோதல்களை ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களும் புலிகளுமே உள்ளனர் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனை அரசாங்கம் கொலை செய்தது ௭ன்றே அப்போது ௭திர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். ஆனால், தற்போது உண்மை வெளிவந்துள்ளது.
௭னவே சர்வதேசமும் ஐ. நா.வும் இலங்கைக்கு ௭திராக தீர்மானங்களை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள போது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் வகையில் செயற்பட அரசாங்கம் முனையாது ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லை, ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழ்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுயாதீன நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டமை தொடர்பில் ௭திர்க்கட்சிகள், அரசாங்கம் மீது விரலை நீட்டுவது மட்டுமன்றி சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுக்கும் புலிகளுக்கும் தேவையான சூழலை உள்நாட்டில் ஏற்படுத்தவே முயற்சிக்கின்றன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர போதப் பொருட்களுக்கு அடிமையான ஒருவரை அரசு சந்தேக நபராக சுட்டிக் காட்டக் கூடும் ௭ன்று கூறியிருந்தார்.
மங்கள சமரவீர ௭ம். பி. கூறிய இக் கருத்துக் குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்த வேண்டும். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள புலிகள் நாட்டின் முக்கிய துறைகளிடையே மோதல்களை ஏற்படுத்த சூழ்ச்சிகளை செய்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. விரிவுரையாளர்களின் போராட்டம் மற்றும் தொழிற்சங்க போராட்டம் ௭ன்று அனை த்து போராட்டங்களின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிகளே காணப்படுகின்றது. ௭னவே நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகளுக்கு துணை போய் சரத்பொன்சேகா ௭திர்கொண்ட நிலைக்கு உள்ளாக ௭திர்க்கட்சியினர் முயற்சிக்கக் கூடாது ௭ன்றார்.
யேர்மனியில் நடைபெற்ற அகதிகள் உரிமைக்கான மாபெரும் போராட்டம்.
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
13 அக்டோபர் 2012
தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜமரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் எல்லாமே தெரியவரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஈழமொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன்தினம் அந்நாட்டின் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இதன்போது இந்திய முக்கியஸ்தர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் இலங்கையிலுள்ள சிங்கள அமைப்புகளினிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்நிலையில், "சுடர் ஒளி'யிடம் கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச சமரசேகர கூறியவை வருமாறு:
இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது.
சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு அந்நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றன.
அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் மேற்கூறப்பட்ட நாடுகளின் எதிர்பார்ப்பாகும். கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.
தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார்.
12 அக்டோபர் 2012
மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய படைகள்!
மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும்பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதற்கு அங்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறித்த பகுதியில் காலபோகச் செய்கைக்கான ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த விவசாயிகளை, தமக்கு குறித்த காணி ஒதுக்கப்பட்டதாகக் கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர் படையினர்.
இதனையடுத்துக் குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து குறித்த நிலங்களை விட்டுப் படையினர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கடந்த 1988 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாகப் பயிர்செய்கை மேற்கொண்டு வந்ததுடன், 2004 ஆம் ஆண்டு குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.தற்போது சுமார் 544 குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் இவர்களுக்கு விவசாய உள்ளீடுகள், உரமானியம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நோர்வே சிறுவர் நல காப்பகத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார் சிறுவர் நல விவகார அமைச்சர்.
11 அக்டோபர் 2012
கனடா தமிழ் திரைப்பட விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!
கிளிநொச்சியில் 105 ஏக்கர் நிலத்தை படையினர் கையகப்படுத்தியுள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)