வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து கோமாநிலையில் போராடி உயிர் இழந்த மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் வந்தடையவுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை சனிக்கிழமை அவரது சொந்த இடமான பாசையூரில் நடைபெறவுள்ளது. அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன் கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது.
முன்னதாக நீண்ட இழுபறிகளின் பின்னரே மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரது பூதவுடலுடன் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் செல்கின்றனர்.
இந்தக் கட்சியினரின் பாதுகாப்புடன் நேற்றிரவு பூதவுடல் தாங்கிய வாகனம் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போராளியான அவர் தகவலொன்றின் அடிப்படையினில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியினில் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.