|
வேலணை சாட்டி |
சிறிலங்கா கடற்படை வடக்கில் மேலும் மூன்று கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது. இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. மற்றையது யாழ் வேலணை சாட்டிப்பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. சாட்டியில் நிரந்தர முகாங்கள் அமைக்கப்படுவதற்காக பெருமளவிளான தளபாடங்கள் இறக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை மாதகல் சம்பில்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் சிறிலங்கா கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சிறிலங்கா கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.