பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை போல் கொள்கையில்லாத சலுகைக்காகவும் அமைச்சு பதவிக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவும் நபர் தான் அல்ல எனவும் தான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தாவாத கொள்கைவாதி எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று பழுகாமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் பொய்யான தகவல்களை கூறுவது சிறந்தல்ல. நான் புலிகளை விட கூடிய பயங்கரவாதி எனவும் பெரிய புலி எனவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார். நான் அவருக்கு ஒன்றை கூறி வைக்க விரும்புகிறேன். நான் புலி அல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சி விட்டு கட்சி தாவாத கொள்கைவாதி.
இனம் நசுக்கப்படும் போது குரல் கொடுக்கும் அரசியல்வாதி நான். நான் இறந்தலும் என்னைப் போல் ஒருவன் இந்த மண்ணில் பிறப்பான் என்பதை ஹிஸ்புல்லா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அரியநேந்திரன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.