சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில்,
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், சிறிலங்காவில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது.
இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.
இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கம் பரந்தளவிலான தீவிரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது.
அதிகளவிலான சிறிலங்கா இராணுவத்தினர் நாடுமுழுவதிலும் நிலை கொண்டுள்ளனர்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.