உயர்நீதிமன்றின் தமிழ்பேசும் நீதிபதிகளினால் விசாரிக்கப்பட வேண்டுமென கட்டளையிடப்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய பிரச்சினை பற்றிய மனித உரிமைகள் மனு ஜனவரி 23இல் கவனத்தில் எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவான ஜி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஷிரானி திலகவர்த்தன, எஸ்.ஐ.இமாம், பியசத் தெப் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன் வந்தது.
திருமுறிகண்டி பக்தர்கள் மன்றத்தின் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் வி.நாகராசா ஆகியோர் தலையிட்டு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
ஆலய பக்தர்களின் பிரதிநிதிகளாலான ஒரு சுயாதீனமான முகாமைத்துவ சபை இக்கோயிலை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட வேண்டுமென இந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.