|
|
திருமணமாகி இரண்டு வாரங்களேயான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிகாயங்களுக்கு ஆளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி சாவடைந்தார்.
சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த அஜந்தன் சுதர்சினி (வயது 20) என்பவருக்கு கடந்த 15ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டுக் கதவுகளைப் பூட்டித் தடுப்புப் பலகையைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்ற இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் வேதனை தாங்க முடியாமல் சத்தமிட்டபோது முன் வீட்டில் கதைத்துக் கொண்டிருந்த இவரது கணவரும் உறவினர்களும் ஓடிவந்து கதவுகளைத் திறக்க முடியாத நிலையில் அதனை உடைப்பதற்கு ஆயத்தங்கள் செய்தபோது சுதர்சினி பின் கதவைத்திறந்து வெளியே எரிந்த நிலையில் ஓடிவந்துள்ளார்.
அங்கு நின்றவர்கள் தீயை அணைத்து உடனடியாக வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.சாவகச்சேரி வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.இந்த மரணம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து நீதிவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.