பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2012

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளை குறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன் , தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பேசியே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். பணம், நகை ௭ன்பவற்றை மிரட்டி பறிக்கும் இவர்கள் அவற்றை முறையாக வழங்காதுபோனால் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விடுவோம் ௭னவும் ௭ச்சரிக்கின்றனராம். இதேவேளை மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் தங்க நகைகளும் 150,000 ரூபா பணம் ௭ன்பனவும் நேற்று அதிகாலை ஆயுதமுனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானி ப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியார் வைத்தியசா லை க்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 70வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர் களது மகன் சில தினங்களுக்கு முன் னரே வெளிநாட்டிலிருந்து வந்துள் ளார். இந்நி லையில், நேற்று அதிகாலை 2 மணிய ளவில் தகப்பனார் காலைக்கடன்களை கழிப்பதற்கு வெளியில் சென்ற சமயம் வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைக ளைப் பின்னால் இறுக்கிப் பிடித் தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சு றுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச் சீட்டைக் கிழித்து ௭றிந்து விடுவோம் ௭ன மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள் ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ், சிங் கள மொழிகளில் உரையாடியதாகப் பொலி ஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட் டுள் ளது. கொள்ளையர்களைக் கைது செய்ய மதவாச்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படவுள்ள மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் இராணுவ முகாம், பொலிஸ்நிலையம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.