வவுனியா சிறைச்சாலையில் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குல் காரணமாக கணேசன் நிமலறூபன் என்ற அரசியல் கைதி 03-07-2012 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் மேற்படி தாக்குதலின்போது படுகாயமடைந்து கோமநிலையில் இருந்த டெல்றொக்சன் என்ற தமிழ் அரசியல் கைதியும் நேற்றய தினம் 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள சிறை ஒன்றில் குறிப்பாக நீதித்துறையின் பாதுகாப்பில் இருந்த ஓர் கைதியை விசாரணை நடாத்தி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்காக எத்தகைய தண்டனையும் வழங்கும் அதிகாரம் அரசின் நீதித்துறைக்கு இருந்தது. அவ்வாறு செய்யாது தனது கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரை இவ்வாறு அரசு படுகொலை செய்துள்ள செயற்பாட்டின் மூலம் ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரகுணம் மிக்கவர்கள் என்பதனை இந்தக் கொலை மூலம் உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பில் இருந்தவர்களை தானே தாக்கிக் காயப்படுத்தியது மட்டுமன்றி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிசசை வழங்காகது சாகடித்துமுள்ளது. நிமலரூபன் அவர்கள் உரிய சிகிச்சைகள் இன்றி சாகடிக்கப்பட்ட பின்னரும் கூட டெல்றொக்சன் அவர்களது உயிரைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது அவரை அரசு சாகடித்துள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைவர்
செல்வராசா கஜேந்திரன், பொதுச்செயலாளர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைவர்
செல்வராசா கஜேந்திரன், பொதுச்செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.