சிறிலங்காவில் இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று கொகோஸ் தீவுக்கு அருகே பாறைகளில் சிக்கிக் கொண்டதால், நான்கு அகதிகள் நீந்திக் கரையேறினர்.
நேற்றுக்காலை 8 மணியளவில் கொகோஸ் தீவில் இருந்து 300 மீற்றர் தொலைவில் கற்பாறைகளுக்கு நடுவே சிறிலங்கா அகதிகள் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் 69 தமிழ் அகதிகள் இருந்தனர்.
இதையடுத்து அந்தப் படகில் இருந்த நான்கு ஆண்கள் நீந்திச் சென்று கொகோஸ் தீவில் கரையேறினர்.
இவர்களைப் பார்த்த கொகோஸ் தீவு வாசி ஒருவர், அவர்களுக்கு அப்பிள் பழங்களையும். குடிநீரையும் கொடுத்து உதவியதுடன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பாறையில் சிக்கியிருந்த படகில் இருந்த 65 பேரும் மீட்கப்பட்டு கொகோஸ் தீவு கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் இருந்து அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிப் புறப்பட்டவர்களாவர்.
அதேவேளை நேற்றுமுன்தினம் 28 தமிழ் அகதிகளுடன் சிறிலங்காவில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றும் கொகோஸ் தீவை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.