மூதூரில் பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும், இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
நியுயோர்க்கைத் தலைமையகமாக கொண்டியங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
”மூதூரில் 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் நாள் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர்களை பொறுப்புக் கூறவைக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.
கொடூரங்களைப் புரிந்த சிறிலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினரை நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாடு காட்டவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இந்தப் படுகொலைகளில் சிறிலங்கா அரசபடையினர் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்த போதும் எவரும் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனையவேயில்லை.” என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.