படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகள், கணவரை இழந்த இளம் பெண்களை இலக்கு வைத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
குறித்த பொலிஸ் நிலையததின் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டரான பிரிய தர்சன என்பவருக்கு எதிராகவே இவ்வாறு பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அவ்வதிகாரியினது அடாவடிகள் எல்லையில்லாது அதிகரித்து செல்கின்ற போதும் பாதிக்கப்படும் பொது மக்கள் அச்சங்காரணமாக பகிரங்கமாக முன்வந்து முறைப்பாடுகளை செய்ய மறுத்தே வருகின்றனரென சிவில் சமூகப்பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
2006ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் காணாமல் போன தனியார் கல்வி நிலைய நிர்வாகி ஒருவரது மனைவி மற்றும் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுள் வைத்துக் கொண்டுள்ளதுடன் அவர்களை அடிமை போன்றே கையாண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தெற்கைச் சேர்ந்த குறித்த அதிகாரியினது மனைவி மற்றும் குடும்பம் தெற்கிலுள்ள போதும் தனியாக வாழும் இவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவரது கைங்கரியம் கட்டுப்பாட்டை தாண்டி செல்வதாக நகரசபை அங்கத்தவர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக வல்வெட்டித்துறை பொலிஸ எல்லைக்குட்பட்ட கிராமமொன்றில் குறித்த சப் இன்ஸ்பெக்டரது பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக முன்னாள் பெண் போராளி யொருவர் தீக்கிரையாகி தற்கொலை செய்து கொண்டமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆட்களைப் பழி வாங்குவது மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்து அலைக்கழிக்கப்படுவதென இந்நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்புகள் குற்றச்சாட்டுக்களை முனவைத்து வருகின்றன.
குறிப்பாக பாடசாலை மாணவிகள் சிலர் கூட இவரது வலைக்குள் வீழ்த்தப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் மனங்களை வெல்லப் போவதாகவும் மக்களுக்கு சேவை ஆற்றப் போவதாகவும் அடிக்கடி பத்திர்கையாளர்களை சந்தித்து அறிக்கைகள் வாசிக்கும் பொலிஸ் அதிகாரிகள் இவரது விடயத்தில் கண்டும் காணாமலும் இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது.
குறித்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பல அதிகாரிகள் தகவல்களை உறுதிப்படுத்தியதுடன் தங்களால் ஏதும் செய்யமுடியாத பரிதாகரமான நிலையில் இருப்பதையும் ஏற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.