பக்கங்கள்

20 ஜூலை 2010

சிங்கள வைத்தியரை சிறையில் வைத்த தமிழ் அதிகாரி மீது தாக்குதல்.




வேலணை மருத்துவமாது தர்ஷிகா கொலை வழக்கின் சந்தேக நபரான சிங்கள மருத்துவரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, யாழ்ப்பாணச் சிறையில் அடைப்பதற்காக அவரைக் கூட்டிச் சென்ற சிறைச்சாலை அதிகாரி மீது கடந்த சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தம்மீது தாக்குதல் நடத்தியதாக குறித்த சிங்கள மருத்துவர் குற்றஞ்சாட்டியுள்ளமையை அடுத்தே 31 வயதான நந்தகுமார் எனப்படும் சிறைச்சாலை அதிகாரிமீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு ஆனைக்கோட்டையிலுள்ள நந்தகுமாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு நபர்களே இவர்மீது தாக்குதல் நடத்தியதோடு அவரின் வீட்டையும் அடித்து நொருக்கியுள்ளனர்.இதேவேளை, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் உட்பட பலர் தமக்கு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும், இந்த அச்சுறுத்தல்களை அடுத்தே தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் நந்தகுமார் கொடுத்துள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை இராணுவத்துடன் இயங்கிய துணைக்குழுக்கள் நடத்தும் கொலை மற்றும் பிற தாக்குதல்களை ஒத்ததாகவே தற்போது நந்தகுமார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளதாக குடாநாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.