பக்கங்கள்

25 ஜூலை 2010

பேரினவாத சிங்களத்தோடு கிரிக்கெட் விளையாட கோத்தபாய அழைப்பு.


லண்டனில் இயங்கிவரும் மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழகம்(MTSSC) இலங்கை விமானசேவையான ஏர் லங்காவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள பல பாடசாலை முன்னாள் மாணவர்கள் இது தொடர்பாக பல சந்திப்புகளை நடாத்தி இருக்கின்றனர். சிலர் சிங்களவனோடு விளையாடக் கூடாது என்றும் சிலர் விளையாடலாம் என்றும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். விளையாட இருக்கும், அல்லது விளையாட விரும்பும் துடுப்பாட்ட வீரர்களே ஒரு கணம் இதை வாசியுங்கள்!சர்வதேசரீதியாக பல அவப்பெயர்களைச் சம்பாதித்துள்ள இலங்கை அரசு தனது உண்மையான முகத்தை மறைக்கவே இவ்வாறன விளையாட்டுப் போட்டிகளையும், விழாக்களையும் நடாத்தி வருகின்றது என்ற உண்மையை எவராலும் அவ்வளவு சுலபத்தில் மறுத்துவிட முடியாது. இந்திய திரைப்பட விழா இலங்கையில் நடைபெற்றது. அதை தமிழக திரை உலகினர் புறக்கணித்தனர். இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகைகளை நிறுத்தியுள்ளது. இது அனைத்தையும் நாமே பிழை என்று கூறுவது போல அமைந்துள்ளது எமது செயல்.ஏர் லங்கா நிறுவனம் உட்பட இலங்கையின் உட்பத்திப் பொருட்களை தமிழர்கள் புறக்கணித்து வரும் இவ்வேளை இதுபோன்ற செயல்கள் சிங்கள அரசுக்கே நன்மை பயக்கும் விடயமாக அமையும், சற்று சிந்தித்துப் பாருங்கள்! தமிழ் விளையாட்டுக் குழுக்கள் சிங்களவர்களோடு விளையாடுவதன் மூலம் தமிழர்களுக்கு என்ன லாபம்? மாறாக சிங்கள அரசு இலங்கையில் போர் இல்லை, போர்குற்றம் நடைபெறவில்லை, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தாராளமாக வந்துசெல்லாம், மற்றும் தமிழர்கள் மகிந்த அரசோடு பின்னிப் பிணைந்து உள்ளார்கள் என்பதையே உலகிற்கு காட்டும். ஆக மொத்தத்தில் இந்த விளையாட்டுகள் மூலம் சிங்கள அரசே 100% நன்மை அடையப் போகிறது. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து, போரில் வென்றது போதாது என்று தற்போது தமிழர்களை அடி முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறது சிங்களம். தொடர்ந்து அவர்கள் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக சில தமிழ் பிரமுகர்களை இலங்கை அரசு தன்வசப்படுத்தி வைத்துள்ளது. அவர்களின் முன்னெடுப்புகள் மூலம், தான் நினைத்ததை இலங்கை அரசு சாதித்துவருகிறது. அரசியலையும் விளையாட்டுத் துறையையும் கலக்கவேண்டாம் என்று கூறும் அதீத புத்திஜீவிகளே வாருங்கள்! முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் மக்களையும் இளைஞர்களையும் கொல்லும் போது, இவன் விளையாட்டு வீரன் இவனைக் கொல்லவேண்டாம், இவன் கிரிக்கெட் விளையாடுபவன் ஆனபடியால் இவனைக் கொல்லாது விடுவோம் என்று விட்டார்களா? கண்ணில் கண்ட அனைவரையும் அல்லவா கொன்றார்கள்? அப்படி இருக்கும் போது அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று எவ்வாறு புண்ணாக்கு நியாயம் பேசுவீர்கள்? ஏன் மக்களை திசை திருப்புகிறீகள்? ஏன் மக்கள் மனதை மாற்ற நினைக்கிறீர்கள். மகிந்த அரசுடன் சேர்ந்து இயங்கி அவர்கள் கொடுக்கும் பணத்திற்கும், பதவிக்கும், மற்றும் செல்வாக்காக நீங்கள் இருக்கவேண்டும் என்பதற்காக மற்றத் தமிழர்களை ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்?இயன் போத்தாவின் தென்னாபிரிக்க இனவெறி, நிறவெறி அரசிற்கு எதிராக போராட்டம் நடாத்திய பல உலக நாடுகள் , அந்த நாட்டின் விளையாட்டு அணியினரை தமது நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. அவர்கள் போராட்டம் வேறு அரசியல் வேறு என்று பார்க்கவில்லை. தென்னாபிரிக்க உற்பத்திப் பொருட்களையும் புறக்கணித்தார்கள். சிறிலங்கா கிரிக்கட் அணியினர் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாதென்று ,அங்குள்ள தமிழின உணர்வார்கள் எதிர்த்தார்கள் அந்த அறிவு கூட தமிழர்களுக்கு இன்னும் எட்டவில்லையா ?புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் கிளிநொச்சி சென்று அங்கு வாரக் கணக்கில் தங்கி, மான் இறைச்சி கிடைக்குமா, மரை இறைச்சி கிடைக்குமா என்று கேட்டுவாங்கிச் சாப்பிட்டு கைகள் நனைத்து, அவர்கள் போட்ட உப்பைக் கூட மறந்து சிங்களத்தோடு கைகோர்த்து நிற்பது என்பது, பெற்ற தாயை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பான செயலாகும். லண்டனில் எத்தனையோ விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்றன, வேற்றின விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், அல்லது ஐரோப்பா தழுவிய ரீதியில் தமிழர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம்... எல்லாவற்றையும் விடுத்து இலங்கை அரசோடு சென்று தான் சொறியவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?போர் முடிந்துவிட்டது, இனி அரசுடன் ஒத்துத் தான் போக வேண்டும் என்று ஒரு கும்பல்! அரசுடன் இணைந்து செயல்பட்டால் எமது இலக்கை அடயலாம் என்று ஒரு கும்பல் (தமிழீழத்தை) ! எப்படி இலங்கை அரசு தமிழர்களுக்குள் ஊடுருவி தமிழர்களை அழித்ததோ அதேபோல தாமும் ஊடுருவி அழிக்கப் போவதாக சொல்லிக்கொண்டு இன்னொரு கும்பல் அரசுடன் சேர்ந்து இயங்குகிறது! புனர்வாழ்வுக்கு மட்டும் நாம் இலங்கை அரசோடு இணைவோம் என்று சொல்லும் இன்னொரு கும்பல்! அத்தோடு விளையாட்டு மட்டும் தான், அதுவேறு இது வேறு என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசோடு இணைந்து செயல்பட எந்தச் சொல் பதங்களைப் பாவிக்க முடியுமோ அத்தனை சொல் பதங்களையும் பாவிக்கிறான் தமிழன்! ஆகமொத்தத்தில் இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்த அரசுடன் இணைந்து செயல்பட சில தமிழர்கள் கங்கணம் கட்டி நிற்பதைப் பார்த்தால், நாம் எல்லாம் ஒரு இனம் தானா என்ற கேள்விதான் எழுகிறது. சூடு சுறணை, வெட்கம், மானம், ரோஷம் எதுவும் எமக்கு இல்லையா? நாம் எல்லாம் தமிழ்த் தாயின் பாலைத் தான் குடித்து வளர்ந்தோமா? இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வேண்டும் என்று வேற்றின மக்கள், மனிதநேய அமைப்புகள், ஐ.நா போன்ற அனைத்து அமைப்புகளும் சொல்கின்றன. ஆனால் இவ் அமைப்புகள் வெட்கி நாணிக் கோணும் வகையில் சில தமிழர்கள் நடந்துகொள்கிறார்கள். யார் பலமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அங்குபோய் ஒட்டுக்கொள்ளும் இவர்கள் போன்ற பச்சோந்திகள் இருக்கும்வரை எமது இனத்திற்கு விடுதலை என்பது ஒரு எட்டாக் கனியாகவே இருக்கப்போகிறது. இவர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும் !சிங்களப் பேரினவாதிகளோடு, கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழக முக்கியஸ்தர், வினாயகம் சங்கரலிங்கம் என்பரோடு அதிர்வு இணையம் தொடர்புகொண்டு அவர் பக்க கருத்துக்களை கேட்டறிய முனைந்தபோது, மிகவும் பரபரப்படைந்த அவர், எதையும் கூற மறுத்துவிட்டார். எதுவாக இருந்தாலும் தான் கதைப்பதற்கு தயார் இல்லை என்று கூறிய சங்கரலிங்கம் அவர்கள் இலங்கை அரசின் செயல்களை ஞாயப்படுத்தவே பெரிதும் முன்றார். அத்தோடு, கடும் கோபமும், ஆத்திரமும் அடைந்த அவர் தொடர்ந்து பேச மறுத்து தொலைபேசியையும் துண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.