பக்கங்கள்

19 ஜூலை 2010

ஐ.நா.விடும் தவறுகளை சிறிலங்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம்.




ஐ.நாவில் ஏற்பட்டுள்ள ஒழுக்கமற்ற நிலமை தொடர்பான விழிப்புணர்வை பான் கீ மூனுக்கு ஏற்படுத்த வேண்டும். ஐ.நா விடும் தவறுகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஐ.நாவின் ஆலோசனைக்குழுவை கலைத்துவிடலாம் என ஐ.நாவின் ஊடக அமைப்பான த இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணகைள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை 8 அங்கத்தவர்கள் கொண்ட குழுவை ஜசிகா நியூவேர்த் தலைமையில் மேலதிகமாக அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து அதன் தலைவர் மீதும், ஐ.நா சபையின் உறுப்பினர்கள் மீதும் சிறீலங்கா அரசு சேறடிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
ஜசிகா ஊழல்களை புரிந்துள்ளதாகவும், நவநீதம் பிள்ளைக்கும், ஜசிகாவுக்கும் இடையில் மிக நெருக்கிய உறவுகள் உள்ளதாகவும் பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறுவர்களும், ஆயுத மோதல்களுக்குமான ஐ.நாவின் பிரதிநிதி பற்றிக் கமரேற் அங்குள்ள விடுதியில் மசார்ச் (massage services) சேவைகளை பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் சிறீலங்கா அரசு தொவித்துள்ளது.
சிறீலங்கா அமைத்த அனைத்துலக நிபுணர்குழுவில் முன்னர் பணியாற்றியவரும், தற்போதைய ஐ.நா ஆலோசனைக்குழுவின் தலைவருமான மார்சுகி தருஸ்மன் முன்னர் சிறீலங்கா அரசு கொடுக்க மறுத்த பணத்தை வாங்கவே தற்போது அங்கு செல்ல விரும்புவதாகவும், சிறீலங்காவுடன் கடுமையாக நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலமை தொடர்பான விழிப்புணர்வை பான் கீ மூனுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இது தொடர்பில் பான் கீ மூனின் கவனத்தில் கொண்டுவரப்பட்ட போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஐ.நா விடும் தவறுகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஐ.நாவின் ஆலொசனைக்குழுவை கலைத்துவிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.