பக்கங்கள்

27 ஜூலை 2010

வவுனியாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு!


வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தலை கண்டித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் இன்று காலையில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


வவுனியாவில் தங்குமிட விடுதி நடத்தி வருபவரான புஷ் என்று அழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜா(வயது 41) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டு 06 இலட்சம் ரூபாய் கப்பம் கொடுத்த பின் விடுவிக்கப்பட்டார்.


இந்நிலையிலேயே கடைகளை காலை முதல் மதியம் வரை சுமார் 4 மணித்தியாலங்கள் வரை மூடி விட்டு வவுனியாவின் வர்த்தகர்கள் அனைவரும் சங்கத்தின் எதிரில் கூடி, அமைதியாக அமர்ந்திருந்து, எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

வர்த்தகர் மாரிமுத்து கதிர்காமராஜா வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துப் புலனாய்வு விசாரணை நடத்திக் பொலிஸார் கடத்தல்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரி உள்ளார்கள். இதனால் வவுனியா நகரம் முழுவதும் வெறிச் சோடிக் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.