வேலணையில் மரணமான மருத்துவ மாதின் இறுதிச்சடங்கின்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி இன்று காலை பிராந்திய சுகாதார வைத்திய நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
இவ்வாறு குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெவிக்கின்றனர்.இதற்கு அனைவரையும் ஒத்துழைப்புத் தருமாறும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ மாதுவாக சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட உத்தியோகத்தர் தர்ஷிகா சரவணனின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றபோது இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
இதேவேளை அமரரின் இறுதிச்சடங்கின்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப நல மருத்துவ மாது இறுதி ஊர்வலத்தின்போது கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை விட்டதுடன்,
வேலணை வைத்தியசாலை ஊழியர்களை விசாரணை செய்க
இன்று உனக்கு நாளை எமக்கு,
சந்தேக நபரைப் பணிநீக்கம் செய்
என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.