ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.விசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.