பக்கங்கள்

11 ஜூலை 2010

ஷிராந்தியுடன் வவுனியா சென்றார் அசின்.




தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரம் அசின் இன்று வவுனியாவிற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டார்.
சிறிலங்காவில் நடைபெறும், இந்திப் படப்பிடிப்புக்காக சிறிலங்கா சென்றுள்ள நடிகை அசினுக்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவில் பலமான பாதுகாப்பும், சிறிலங்கா ஜனாதிபதியின் சிறப்பு விருந்தினராகவும் கவனிக்கப்பட்டு வருவதாக்க கொழும்புத் தகவல்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், இன்று காலை வவுனியா நகருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் நடிகை அசின் விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற ஷிராந்தி – அசின் குழுவினருக்கு தமிழ்முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.
வைத்தியசாலையிலுள்ள சத்திர சிகிச்சைக் கூடம், மற்றும் கண் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர், அங்குள்ள குறைபாடுகளையும், தேவையான விடயங்களையும் கேட்டறித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.