பக்கங்கள்

28 ஜூலை 2010

சிங்களவன் மூட்டிய தீ அணையாது எரிகிறது!தமிழ் தம்பதி தற்கொலை முயற்சி.


வன்னியில் அண்மையில் மீளக்குடியேறிய இளம் தம்பதியினர் தம்மைத் தாமே கொல்ல முயற்சித்ததில், கணவர் உயிர் பறிபோயுள்ளது. கிளிநொச்சியில் கடந்த ஞாயிறு இச்சம்பவம் நடந்துள்ளது. கணவர், மனைவி இருவரையும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்த்தபோதும், கணவர் இறந்துவிட்டார். மனைவி தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த போரின்போது, இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் இத்தம்பதியின் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமது குழந்தைகளையும், சொத்துக்களையும் இழந்த நிலையில் மீளக்குடியேறிய இவர்கள் அந்த மனவருத்தத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாமென அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.இறந்த கணவர் 29 வயதான சிவசுப்ரமணியம் சோமசுந்தரம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி 26 வயதான சோமசுந்தரம் தனலக்ஷ்மி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அக்கராயன்குளத்திலுள்ள கெங்காதரபுரத்திலுள்ள அவர்களின் வீட்டிலேயே தற்கொலைக்கு முயற்சித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.