கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி, இலங்கை அகதிகளை ஏற்றிய தாய்லாந்து கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் குடிவரவு அதிகாரிளுக்கு கிடைத்த தகவல்படி, இவ்வாறான கப்பல் ஒன்று சுமார் 200 வரையான அகதிகளுடன் பயணித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் வீ சன் சீ என்ற இந்த கப்பலை இறுதியாக தாய்லாந்து குடாக்கடலில் வைத்து அவதானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடற்படையினரின் தகவல்படி, இந்த கப்பல் சட்ட விரோத குடியேறிகளை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 76 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற ஓசியன் லேடி என்ற கப்பலும், பிரிட்டிஸ் கொலம்பியா என்ற துறைமுகத்தையே சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கடலில் பயணிப்பதாக கூறப்படும் எம் வீ சன் சீ என்ற கப்பல் தொடர்பில் தமது அதிகாரிகள் கண்காணிப்பை செலுத்தி வருவதாக கனேடிய குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த கப்பலில் பயணிப்பவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என இலங்கையின் அரச வார இதழான சண்டே ஒப்சேவர் சந்தேகம் தெரிவித்து செய்தி பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.