பக்கங்கள்

22 ஜூலை 2010

ஐ.நா.நிபுணர் குழு நவநீதம்பிள்ளையின் கீழ் இயங்கும்.



ஐ.நா இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழுவுக்கு தேவைப்படும் அதிகாரிகளை வழங்கும் விவகாரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தினால் கையாளப்படுவதாக ஐ.நா.பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கியை மேற்கோள் காட்டி இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பிரதிநிதியாக பணியாற்றி வந்த ரிச்சர்ட் பென்னெற் நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளார்.நவநீதம்பிள்ளையின் சிநேகிதியான ஜெசிக்கா நியூபேர்த் நிபுணர்குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படவிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் முன்னர் தெரிவித்திருந்த போதும் அவர் நியமிக்கப்படமாட்டார் என்று நீ சேர்கி கூறியுள்ளார்.
ஐ.நா.பேச்சாளரை மேற்கோள் காட்டி ஐ.நா.செய்திகள் நிலையம் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி ரிச்சட் பென்னெற் நிபுணர் குழுவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும். பென்னெற் இதுவரை நேபாளத்தின் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பிரதிநிதியாக இருந்தார்.முன்னர் ஆப்கானிஸ்தானிலும் இவர் இதே பதவியை வகித்தார்.
"அரசியல், மனிதாபிமான, சட்ட விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகங்கள், மனித உரிமைகளுக்கான பிரதி உயர் ஸ்தானிகர்கள், ஐ.நா.தலைமை அதிகாரி செயலாளர் நாயக அலுவலகத்தின் அரசியல் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையின் கீழ் நிபுணர் குழு உறுப்பினர்கள் சந்திப்பார்கள் என்றும் பேச்சாளர் கூறியுள்ளார்.
"சிறியளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிபுணர் குழுவின் சபைப்பகுதியில் முழுநேரம் பணியாற்றுவார்கள். அதேசமயம் சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளப்படும்போது அவற்றில் பொருத்தமான அனுபவங்களைப் பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் ஐ.நா.பேச்சாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.