பக்கங்கள்

22 ஜூலை 2010

அமெரிக்கா பாடம் சொல்லி தரத் தேவையில்லை-ஹெகலிய.


இலங்கைக்கு அமெரிக்கா பாடம் சொல்லித் தரத் தேவை இல்லை என்று அரசின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கடுமையாக சாடி உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த மத்திய ஆசிய தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சரினால் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாகவே கெஹலிய இவ்வாறு கொக்கரித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகம், தேசிய, நல்லிணக்கம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை அரசு பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்திப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரொபேர்ட் பிளேக் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையிலேயே இக்கருத்துக்களைக் கூற ரொபேட் பிளேக்குக் எவ்வித உரிமையும் சரி, அருகதையும் சரி கிடையாது என்றும், அவர் இலங்கைக்கு பாடம் சொல்லித் தரத் தேவை இல்லை என்றும் இலங்கையில் உள்நாட்டு விடயங்களில் மூக்கு நுழைக்கத் தேவை இல்லை என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சீறிப் பாய்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.