வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா கொலை செய்யப்பட்டதையடுத்து தர்ஷிகாவின் குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.இந்நிலையில் சில நபர்கள் மோட்டார் சைக்கிளில் பல தடவைகள் வந்து இந்த கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும், தனது மகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி தர்ஷிகாவின் தாயார் மனுவொன்றினை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்தார். மேலும் தர்ஷிகாவின் சடலத்தினை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும், அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனவும் தர்ஷிகாவின் தாயார் இன்று நீதிமன்றத்தில் கையளித்திருந்நத மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸார் சாவகச்சேரி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கும் அவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இன்று ஊர்காவற்துறை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். இதனிடையே பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று நீதிமன்றில் ஆஜரானமை குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.