மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்னாள் முற்பகல் சில மணி நேரங்களுக்குள் குறித்த ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த இராணுவத்தினர் எந்த வகையில் காயம் அடைந்தனர் என்பது தொடர்பிலான விபரங்களைப் பெற முடியவில்லை. அம்புலன்ஸ் வண்டியுடன் சென்ற இராணுவத்தினர் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் வாகனங்கள் மணலாற்றில் இருந்தே அங்கு வந்ததாக அறிய முடிந்ததாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக வன்னி மற்றும் மட்டக்களப்பு காட்டுப் பகுதிகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்தச் சம்பவம் குறித்த தகவலினையே உறுதி செய்ய முடிந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.