பக்கங்கள்

20 ஜூலை 2010

ஐ.நாவின் நிபுணர் குழு முதற் தடவையாக கூடியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்,இலங்கை தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று முதல் தடவையாக கூடியுள்ளது
அமெரிக்க நியூயோர்க்கில் இந்தக்குழு கூடியதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
நான்கு மாதத்தில் தமது அறிக்கையை சமர்ப்பிக்கும் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக்குழுவின் விசாரணைகள் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள உண்மையை கண்டறியும் குழுவுக்கு ஒத்திசைவான வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் வடக்கு லோன் கட்டிடத்தில் குழுவின் தலைவர் மர்சூகி தாருஸ்மான், உறுப்பினர்களான யஸ்மின் சூக்கா மற்றும் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் பிற்பகல் 1.30க்கு தமது கலந்துரையாடலை ஆரம்பித்ததாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.