நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (23) மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் மழை பெய்துள்ளது.
தம்புள்ள, பணம்பிட்டிய, விகேன, களுந்தாவ, அதாபெதிவெவ ஆகிய பிரதேசங்களில் மஞ்சள் மழை பெய்துள்ளது.
நாவுல, கோபல்ல ஆகிய பிரதேசங்களில் சிவப்பு மழையும் பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலன்நறுவை, மெதிரிகிரிய உல்பத்அலகம பிரதேசங்களில் நேற்று (22) மஞ்சள் நிற மழை பெய்துள்ளது.
இந்த மழை நான்கு நிமிடங்கள் வரை தொடர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதேவேளை நாவுல, கிதுல பிரதேசங்களில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.