யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் எவரும் இன்று சமூமகளிக்காததனால், பல்க்லைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியிருப்பதாகப் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிங்கள மாணவர்களும் முன்னதாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, பல்கலைக்கழக சூழலில் பிரசன்னமாகியிருக்கின்ற படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டு, பல்கலைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்வைத்திருக்கின்றது.
யாழ் பல்ககக்கழகத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்லைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு, வவுனியா பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர் நேற்றும் இன்றும் சென்று பார்வையிட அனுமதித்திருந்ததாக மாணவர் ஒருவரின் பெற்றோர் தெரிவித்தனர்.
யாழ் பல்கலைக்கழக விவாகாரம் என்பது வர்த்தக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ரடிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுவதாகவும், அதனால் செயதியாளர்களிடம் தாங்கள் பேச விரும்பவில்லை என்றும் அந்தப் பெற்றார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் யாழ் பல்கலைக்கழகச் செயற்பாடுகளில் படையினர் தலையிடுவது என்பவற்றைக் கண்டித்து நாளை யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி:பி.பி.சி
நன்றி:பி.பி.சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.