புதுக்கோட்டை ஆலங்குடி சாலை தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றர்.
முகாமில் இன்று (27) அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதை முகாமில் உள்ள மக்கள் அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ அந்த வீட்டிலும் அருகில் உள்ள வீட்டிலும் பற்றிக் கொண்டது.
சிறிது நேரத்தின் பின்னர் மக்களது விடா முயற்சியின் காரணமாக தீ அணைக்கப்பட்டது.
இத்தீ விபத்தின் போது எவருக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும் வீடுகளில் இருந்த பொருட்கள் சில எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.