யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்த மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும்,பொலிஸாரும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்றும் கேட்கவில்லை.
தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள். டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது,யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்,பல மணி நேர மின்வெட்டு என்பவற்றைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு செந்தமிழன் சீமான் பேசினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்ததிய மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும், பொலிஸாரும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்றும் கேட்கவில்லை.
தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள் டெல்லியில் ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டபோது இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன.
ஆனால் தமிழீழத்தில் நமது பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டத்தை இந்திய நாட்டின் ஒரு ஊடகம் கூட கண்டிக்கவில்லையே ஏன்? தமிழன் அடிபட்டால் அதனை தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை. ஆனால் தமிழன் திருப்பி அடித்தால் அதனை பயங்கரவாதம் என்று சர்வதேசம் கூறுகிறது, இது நியாயம்தானா? தமிழ் இனமும், தமிழ்நாடும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு தீர்வு காண எந்த அரசும் வரவில்லை.
இந்த நிலையை மாற்ற வேண்டும். நம் பிரச்சனைகளை கையெடுக்க மறுக்கும் அரசுகளை நாம் கைபற்ற வேண்டும். அது மட்டுமே தமிழினம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும். என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கலைக்கோட்டுதயம், கா. அய்யநாதன், அன்புத் தென்னரசன், வெற்றிக்குமரன், அமுதா நம்பி, மருத்துவர் இளவஞ்சி, குமுதவல்லி, பெரியார் அன்பன், காஞ்சி எழிலரசன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.