யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுது.
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,புதிய மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆறு கட்சிகள் கூட்டாக இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இப் போராட்டத்திற்கு எதிராக ஒரு குழுவினர் ஓர் ஆப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.