பக்கங்கள்

02 டிசம்பர் 2012

நாடு தழுவிய ரீதியில் பல்கலை மாணவர்கள் போராட்ட அறிவிப்பு!

யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தவுள்ளனர்.விரைவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன்,கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சஞ்சீவ பண்டார கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.