கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று (22) பகல் திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குளத்தின் நீர்மட்டம் 30 அடி அளிவில் உயர்ந்துள்ளதால் பகல் ஒரு மணிக்கு ஆறு வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளார்.
எனவே இரணைமடு குளத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் ஊரியான், மருதநகர், முரசுமோட்டை, சிவபுரம், நாகேந்திரபுரம், பரந்தன், உடுப்பாற்று கண்டல், ஐயன் கோயிலடி, தட்டுவன்கொட்டி, புதுக்குளம், பன்னங்கண்டி கோரக்கன் கட்டு ஆகிய ஊர் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.