செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தவதீபன்,காண்டீபன்,ஜான்சன், சவுந்தர்ராஜன் உட்பட 7 பேர் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களிடம் தாசில்தார் இளங்கோவன்,வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்,கிராமநிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தினர்.
தங்களை உடனடியாக திறந்த வெளி முகாமுக்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 4-வது நாளாக நீடித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.