இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் நேற்று 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரத்தோட்டையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்று கொண்டிருந்த போது இரு குழுக்கள் இவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.