|
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் |
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது விடுதலைக்காக போராடி வரும் அமைப்பினது முக்கிய செயற்பாட்டாளரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி காலை 11 மணியளவினிவில் நேரில் சமூகமளிக்குமாறு இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அவர் தற்போது நாட்டினில் இல்லையென அவரது கட்சி தரப்புக்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதன் செயலாளருமான கஜேந்திரன் ஆகியோரின் பின்னணியிருப்பதாக கூறும் அநாமதேய சுவரொட்டிகள் தெற்கு பல்கலைக்கழகங்களில் முளைத்திருந்த நிலையில் இவ்விசாரணை அழைப்பு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.