பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் கடந்த பலவருடமாக வசித்து வந்த ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜன் என்பவர், கடந்த 9ஆம்திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர், கடந்த 9ஆம் திகதி அன்று இரவு 11 மணியளவில் கடையில் பணிபுரிந்துவிட்டு வீடு செல்லும் பொழுது, வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இவர், லெஸ்டர் றோயல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நொட்டிங்காம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காத பட்சத்தில் நேற்றுக் காலை மரணமடந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையின் போது 13,14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் ஆரம்பத்தில் தாக்கப்பட்ட குற்ற வழக்காக இருந்தபோதிலும், இப்பொழுது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரனைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மிட்லான்ட் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை பொலிஸ் அதிகாரி, “இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பல நபர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரித்த போதிலும் எமக்கு மேலும் பல தகவல்கள் மற்றும் சாட்சியங்களை எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
லெஸ்டரின் ஜிப்சி லேன் பகுதியில் இரவு 10.30 இருந்து 11.15 வரை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவிக்க 0800 555 111 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.