பக்கங்கள்

08 ஜூன் 2012

யாழில் சிறீலங்காவின் அரசியல் யாப்பு மாணவர்களால் தீக்கிரை!

மகிந்த ராஜபக்ஷ பிரிட்டன் வந்து தங்கியிருந்த 6ம் திகதி அன்று, இலங்கையின் அரசியல் யாப்பு யாழில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடைசி தமிழ் அரசனான சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள, புனித யோவான் தேவாலய கல்லறையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய மாணவர்களே, மேற்படி தாம் கொண்டுவந்த இலங்கை அரசின் யாப்புகளின் மாதிரியைப் போட்டு பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர். இதேபோன்றதொரு சம்பவம் லண்டன் ஆர்பாட்டத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். சுலோக அட்டைகளினில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரிட்டிஸாரின் கோல்புறூக் - கெமரோன் அரசியல் யாப்பு முதல் டொனமூர், சோல்பெரி அரசியல் யாப்பு ஈறாக 1972ம் ஆண்டினில் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட பௌத்த குடியரசு யாப்பு மற்றும் ஜே.ஆரின் அரசியல் யாப்பு வரையாக ஏந்தி வந்த மாணவர்கள், முன்னைய வெள்ளையின பிரதிநிதிகளது அடையாளமாகவுள்ள அவர்களது கல்லறை முன்பதாக மலர்வளையம் வைத்து தமது இறுதியஞ்சலியினை செலுத்தியுள்ளனராம். மலர்வளையத்தை சூழ தாம் எடுத்து வந்த சுலோக அட்டைகளினை பரப்பி வைத்த அவர்கள், பின்னர் அரசியல் யாப்பின் பிரதிகளையும் அங்கு வைத்து தீயிலிட்டனர். மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியினில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

அதிர்வு இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.