யாழ். நகரப் பகுதி மடத்தடியில் இரு பிரிவினருக்கிடையில் இன்று இடம்பெற்ற வாள் வெட்டு மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய் கிழமை நண்பகல் யாழ். கன்னியர் மட வீதியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனை வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து யுவதி ஒருவரை வெட்டியுள்ளனர்.
இதில் இராசேந்திரம் உஷா என்ற 24 வயது யுவதி கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து யுவதியின் தரப்பினர், கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.